ETV Bharat / sitara

’மாஸ்டர்’ ட்ரெய்லர் வெளியிடுவதில் ஏன் தாமதம்? - இயக்குநர் பதில்

சென்னை: ’மாஸ்டர்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியிடுவதில் ஏன் தாமதம் நீடிக்கிறது என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 6, 2020, 5:03 PM IST

விஜய்
விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் பணிகள் முடிந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக வெளியாகாமல் உள்ளது. இருப்பினும், விஜய் ரசிகர்கள் ’மாஸ்டர்’ பட ட்ரெய்லர் அப்டேட்டை வெளியிடுமாறு தொடர்ந்து கோரிக்கைவைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மாஸ்டர்’ பட அப்டேட் குறித்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பிரபல யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “டீசர், ட்ரெய்லர் என்பது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியிடப்படுகிறது.

எப்படி அதைப் பார்க்காமல் அவர்கள் கவலைப்படுகிறார்களோ, அதேபோன்றுதான் அதை தயார் செய்து வைத்துவிட்டு வெளியிடமுடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

படத்தின் ரிலீஸ் தேதி தெரியாமல் அதை வெளியிடுவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. அது படத்திற்கு எந்தவிதத்திலும் உதவாது. திரையரங்குகள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் வர தொடங்கிய பிறகு, கண்டிப்பாக 'மாஸ்டர்' பட அப்டேட் வெளியாகும். இதை நான் விஜய் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரக்ஷித் ஷெட்டியின் '777 சார்லி' ஒப்பந்தமான பாபி சிம்ஹா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.