ETV Bharat / sitara

'சரவணா' அண்ணாச்சி நடிக்கும் புதுப்பட பூஜை தொடக்கம் - சரவணா அருள் புதியப்படம்

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணா அருள் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Production No.1
Production No.1
author img

By

Published : Dec 2, 2019, 7:57 AM IST

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜவுளி, பாத்திரம், நகை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விற்பனை நிறுவனமாக சரவணா ஸ்டோர்ஸ் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் பிரபல தமிழ் நடிகைகள் தோன்றினர். ஒரு கட்டத்தில் தமன்னா, ஹன்சிகா மோத்வானி இருவரும் நடித்த விளம்பரத்தில் ஒருவர் தோன்றினார். யார் இவர் காமெடி பீஸாக இருக்கிறாரே என்று அனைவரும் கேட்க தொடங்கினர். பின்புதான் தெரிந்தது அதில் நடித்தது வேறு யாருமில்ல சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணா அருள் என்று.

தமன்னா, ஹன்சிகா மோத்வானி உடன் சரவணா அருள் நடித்த விளம்பரத்தை பல்வேறு தரப்பில் இருந்து கிண்டலும் கேலியும் செய்தனர். இணையதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். ஆனால், எதற்கும் அசராமல் அடுத்தடுத்து விளம்பரப் படங்களில் நடித்தார் சரவணா அருள். அதனால் அந்த விளம்பரங்களை பார்க்க மக்களும் பழகிவிட்டனர்.

Production No.1
'புரொடக்‌ஷன் நம்பர் 1 படக்குழு

இப்படி விளம்பர படங்களில் மட்டும் இதுநாள்வரை தோன்றிவந்த சரணவன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'புரொடக்‌ஷன் நம்பர் 1' என்ற தற்காலிக பெயரில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

Production No.1
புரொடக்‌ஷன் நம்பர் 1

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணா அருளே இப்படத்தை தயாரிக்கவும் நடிக்கவும் உள்ளார். இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே தமிழில் வெளியான உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சரவணா அருளுக்கு ஜோடியாக அறிமுக நடிகை கீத்திகா திவாரி நடிக்க உள்ளார்.

Production No.1
கீத்திகா திவாரி - சரவணா அருள்

படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா காளிவெங்கட், நடிகை கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் முதல் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

Production No.1
பிரபு -விவேக்- ஹாரிஸூடன் சரவணா அருள்

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.