ETV Bharat / sitara

சீமானுக்கு ராகவா லாரன்ஸ் மறைமுக எச்சரிக்கை!

author img

By

Published : Apr 15, 2019, 8:28 AM IST

வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும், அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை என்ற தலைப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லாரன்ஸ் மறைமுக எச்சரிக்கை

அந்த பதிவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரடியாக குறிப்பிடாமல் அந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் தொண்டர்கள் சிலர், எனது சேவை தொடர்பான பதிவுகளில் மிகவும் கீழ்த்தரமாகவும், கொச்சையாகவும், அசிங்கமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

lawrences-indirect-warning-to-the-tamil-partys-coordinator-1
சீமானுக்கு லாரன்ஸ் மறைமுக எச்சரிக்கை

இது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. நான் ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சிக்கு போகும் போது கூட, உங்கள் தொண்டர்கள் மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள். நீங்கள் மேடையில் என்னைப் பற்றி எப்போது தவறாக பேசினீர்களோ, அப்போதில் இருந்து இது நடந்து வருகிறது.

இதை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் மாற்றுத் திறனாளிகளான எனது பசங்கள் நிகழ்ச்சி நடத்த செல்லும் போது உங்கள் தொண்டர்களால் பெரும் மன வருத்தத்திற்கு ஆளாகின்றனர். இதை என்னால் தாங்கிக் கொள்ள இயலாது.

tiwitter link
ட்விட்டர் பதிவு

முதலில் நடனத்தில் ஜீரோவாக இருந்தேன். அதிலும் ஜெயித்தேன். நடிப்பில் ஜீரோவாக இருந்தேன் அதிலும் ஜெயித்தேன், படம் இயக்குவதில் ஜீரோவாக இருந்தேன், அதிலும் வெற்றிப்பெற்றேன், அதேபோல் அரசியலில் இதுவரை ஜீரோவாகத் தான் இருக்கிறேன். அதில் ஹீரோவாக்கி என்னை அரசியலில் இழுத்து விட வேண்டாம். சமாதானமா? சவாலா? என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சாய்ஸ் யுவர்ஸ்” என்று சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.