'ஆரோகனம்' , 'அம்மினி' ஆகிய படங்களின் மூலம் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இயக்கிவரும் புதியபடம் 'ஹவுஸ் ஒனர்'.
இதுகுறித்து நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது, வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவதுமனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன்.
அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும் மரியாதையும் அளவிட முடியாது.
‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார்.பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
‘பசங்க' திரைப்படத்தின் மூலமாக தேசியவிருது பெற்றவரும்,‘கோலிசோடா' படத்தில் மிக பிரமாண்டமாக நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார்.
பாடல்களுக்குஉயிருட்டும் விதமாக சின்மயி,சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர்.
‘மகளிர் மட்டும்' புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார்.கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன,அந்த வரிசையில்இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகினார்.