இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன். இவர் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் காதலித்த நபீலா அஹமத் என்ற பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார். இதற்காக இவர் பிப்ரவரி 16ஆம் தேதி இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
குறளரசன் - நபீலா அஹமத் ஆகியோரது திருமண வரவேற்பு வரும் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், திருமண விழாவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்களை அழைக்கும் பணியில் டி.ராஜேந்தர் மும்முரமாகியுள்ளார். அதன்படி டி.ஆர் மற்றும் குறளரசன் ஆகியோர் நேற்று சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரை அவர்களது வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.