தெலுங்கு திரையுலகில் மாஸ் மகராஜா என கொண்டாடப்படும் ரவிதேஜா நடிப்பில், கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், தயாரிப்பாளர் மது தனது சரஸ்வதி ஃபிலிம்ஸ் டிவிஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள தெலுங்கு படம் ’க்ராக்’. சங்கராந்தி சிறப்பு திரைப்படமாக கடந்த ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியானது.
தமிழில் ‘மாஸ்டர்’ படம் போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்கு, திரையரங்குகளில் அலைஅலையாக பெரும் கூட்டம் வந்தது. சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மாஸ், கிளாஸ் கமர்ஷியல் படமாக வெளிவந்துள்ள இப்படம், ரசிகர்களின் கோலாகல வரவேற்பில், பம்பர் ஹிட்டடித்து, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
ஓடிடி தளத்தில் இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால், பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகியாக ஸ்ருதி ஹாசன், முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், வில்லன்களாக சமுத்திரகனி, ஸ்டண்ட் சிவா என தமிழக நடிகர்களே அதிகம் நடித்துள்ளனர். தமிழக தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
தமிழகத்திலும், கேரளாவிலும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், மொழிமாற்றம் செய்யப்பட்டால் கூடுதல் வரவேற்பை பெரும் என விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, க்ராக் படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கு ரசிகர்களை குதூகலப்படுத்திய க்ராக், பிப்ரவரி 5 முதல் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளிவரவுள்ளது.
இதையும் படிங்க: யாஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் படக்குழு