ETV Bharat / sitara

மனம் போன போக்கில் வாழும் மகன்... திருத்த நினைக்கும் 'அப்பா' - 'கொளஞ்சி' விமர்சனம் - சமுத்திரக்கனி

சேட்டைக்கார சிறுவர்களை திருத்த முயற்சி செய்யும் 'கொளஞ்சி' படத்தை பற்றிய திரைவிமர்சனம்

Kolanji
author img

By

Published : Jul 26, 2019, 7:14 PM IST

தனராம் சரவணன் இயக்கத்தில் நடிகர் சமுத்தரக்கனி நடித்திருக்கும் படம் 'கொளஞ்சி'. இப்படத்தில் சமுத்தரக்கனிக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்துள்ளார். இவர்களுக்கு மகனாக கிருபாகரன் நடித்துள்ளார். இயக்குநர் நவீன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமத்துவக் கொள்கைகளை பேசிக்கொண்டு கருப்பு சட்டை, புல்லட் வண்டி என ஊரில் தனி மரியாதையோடு கெத்தாக வாழ்கிறார் அப்பாசாமி ( சமுத்திரக்கனி). இவரின் கொள்கையால் கவரப்பட்டு விரும்பி திருமணம் செய்துகொள்ளும் புஷ்பா (சங்கவி). இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளையும் ஊர் மெச்சும் நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்று கனவோடு இருக்கிறார் அப்பாசாமி.

ஆனால், இவரின் முதல் மகன் ”கொளஞ்சி” யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மனம் போன போக்கில் வாழ நினைத்து தனக்கு சரி என நினைப்பதை செய்து அப்பாவிடம் அடி வாங்கும் பிள்ளையாக வளர்கிறார். இவர், தனது தம்பி முதல் பள்ளி, ஊர், அக்கம் பக்கத்தார் என பலரோடு சேர்ந்து செய்யும் சண்டித்தனமான சேட்டைகளால் அப்பாசாமிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. தன் மகன் ஒழுக்கமாக வளர வேண்டும் என விரும்பி அவனது தவறுகளை சுட்டிக்காட்டி அடித்து வளர்க்க தொடங்குகிறார் அப்பாசாமி. இதன் காரணமாக தந்தையை அறவே வெறுத்து ஒதுக்கி எதிரியாக பார்க்கிறார் கொளஞ்சி.

கொளஞ்சி
அப்பசாமி குடும்பம்

ஒரு கட்டத்தில் தாய், தந்தையர் பிரிவதற்கும் அவரே காரணமும் ஆகிறார். கொளஞ்சி தாய், தந்தையை சேரவிடாமல் என்னென்ன வேலைகள் செய்கிறார்? அவர் மனம் திருந்தினாரா? சீர்கெட்டு திரியும் மகனை அப்பாசாமி எப்படி நல்வழிப்படுத்துகிறார்? தான் செய்த தவறுகளை கொளஞ்சி உணர்ந்தாரா, இல்லையா? என்பது மீதிக்கதை.

‘அப்பா‘ என்னும் படத்தின் மூலம் அப்பாவின் மகத்துவத்தை அதிகம் பேசியுள்ள நிலையில் இந்தப் படமும் அந்த வரிசையில் இடம் பெறுகிறது. படத்தின் கருவாக வரும் சிறுவன் கிருபாகரன் கதையின் நாயகன் என்பதைப் புரிந்துகொண்டு சரியான நடிப்பை கொடுத்திருக்கிறார். கொளஞ்சியுடன் நடித்துள்ள சிறுவன் நசத் (அடிவாங்கி) சினிமாவில் காமெடி சிறுவர்கள் இல்லாத குறையை நிச்சயம் நிரப்புவார் என்றே சொல்லலாம். படம் முழுக்க மைண்ட் வாய்ஸ், உடல் மொழி, வசனங்கள் என முத்திரை பதித்திருக்கிறார்.

சமுத்திரக்கனி வழக்கமாக எல்லா படங்களிலும் வரும் சாதி ஒழிப்பு, கடவுள் நம்பிக்கையற்றவர், தற்போதைய அரசியல் சூழல் என வசனம் பேசி கருத்து கந்தசாமியாகவே இப்படத்திலும் தோன்றி இருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள சங்கவி சில இடங்களில் குணச்சித்திர நடிகையாக மிளிர்ந்தாலும் கதாப்பாத்திரத்தின் தன்மை அறியாமல் சில இடங்களில் உலாவி உள்ளார். அவசியமே இல்லாத சென்ட்ராயன் பாடல், ராஜாஜி லவ் போர்ஷன்கள், சமுத்திரக்கனி - சங்கவி போர்ஷன்கள் என எல்லாமே படத்தில் திணிக்கப்பட்ட காட்சிகளாகவே தெரிகின்றன.

கொளஞ்சி
அப்பாசாமியும் புஷ்பாவும்

பகுத்தறிவுவாதியாக வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் ஒழுக்கமற்றவராக வளர்வார்களோ என்ற சிந்தனை எழுகிறது. கதையில் ஆழமான காட்சியமைப்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மிஸ்ஸிங்.

ஒரே கிராமம், திரும்ப திரும்ப சிறுவர்களின் சேட்டை, சண்டைகள், காதல் காட்சிகள் என இதைத் தாண்டி இயக்குனர் தன்ராம் பெரிதாக யோசிக்கவில்லை. ஒற்றைப் பாறை, ஏரிக்கரை என எதார்த்தமான கிராமத்தை அழகாக பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமி. நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் சுமார். எடிட்டிங் குறிப்பிடும்படியாக இல்லை.

‘மூடர் கூடம் ‘அளவிற்கு ஒரு படம் கொடுத்த நவீன் இப்படத்திற்காக இயக்குநருடன் இணைந்து திரைக்கதை எழுதியும் பெரிய சிறப்பு எதுவும் இல்லை. சிறுவர்கள் எப்படி வளரக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதால் இப்படத்தை பாராட்டலாம். ”கொளஞ்சி” ஒரு சிறு முயற்சி.

Intro:கொளஞ்சி பட விமர்சனம்Body:படம் - கொளஞ்சி

தயாரிப்பு. - நவீன் (மூடர் கூடம்)
இயக்கம் - தனராம் சரவணன்
இசை - நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவு - விஜயன் முனுசாமி
நடிகர்கள். - சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜ், நைனா சர்வார், நசாத்

கதை

சமத்துவக் கொள்கைகளை பேசிக்கொண்டு கறுப்பு சட்டை, புல்லட் வண்டி என ஊரில் தனி மரியாதையோடு கெத்தாக வாழ்கிறார் அப்பாசாமி ( சமுத்திரக்கனி), இவரின் கொள்கையால் கவரப்பட்டு விரும்பி திருமணம் செய்து கொள்ளும் புஷ்பா (சங்கவி) இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளையும் ஊர் மெச்சும் நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்று கனவோடு இருக்கிறார் அப்பாசாமி.

ஆனால், இவரின் முதல் மகன் கொளஞ்சி யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக மனம் போன போக்கில் வாழ நினைத்து தனக்கு சரி என நினைப்பதை செய்து அப்பாவிடம் அடி வாங்கும் பிள்ளையாக வளருகிறார். தனது தம்பி முதல் பள்ளி, ஊர், அக்கம் பக்கத்தார் என பலருக்கும் நண்பர்களோடு சேர்ந்து செய்யும் சண்டித்தனமான சேட்டைகளால் அப்பாசாமிக்கு அவப் பெயர் ஏற்படுகிறது. தன் மகன் ஒழுக்கமாக வளர வேண்டும் என விரும்பி அவனது தவறுகளை சுட்டிக்காட்டி அடித்து வளர்க்க தொடங்குகிறார் அப்பாசாமி. இதன் காரணமாக தந்தையை அறவே வெறுத்து ஒதுக்கி எதிரியாக பார்க்கும் கொளஞ்சி. ஒரு கட்டத்தில் தாய் தந்தையரை சேர்ந்து வாழ விடாமல் பிரிவதற்கு காரணமாகிறார். எந்த காலத்திலும் தன் தாயும் தந்தையும் ஒன்றுசேரக் கூடாது என்ற முனைப்போடு பல வேலைகளை செய்கிறான் கொளஞ்சி.

கொளஞ்சி தாய் தந்தையை சேரவிடாமல் என்ன செய்கிறான்? மனம் திருந்தினானா கொளஞ்சி? சீர்கெட்டு திரியும் மகனை எப்படி நல்வழிப் படுத்துகிறார் அப்பாசாமி ? கொளஞ்சி தான் செய்த தவறுகளை உணர்ந்தானா, இல்லையா என்பது மீதிக்கதை.

‘அப்பா‘ என்னும் படம் ஏற்கனவே வெளியாகி அப்பாவின் மகத்துவத்தை அதிகம் பேசியுள்ள நிலையில் இந்தப் படமும் அந்த வரிசையில் இடம் பெறுகிறது.

படத்தின் கருவாக வரும் சிறுவன் கிருபாகரன். கதையின் நாயகன் என்பதைப் புரிந்து கொண்டு சரியான நடிப்பை கொடுத்திருக்கிறார். வில்லத்தனம், கள்ளத்தனம், பிள்ளைத்தனம் என அத்தனையும் நடிப்பு காட்டி அசத்தி இருக்கிறார் கொளஞ்சி யாக நடித்த கிருபாகரன்.

படத்தின் மிகச்சிறப்பான பொழுதுபோக்கு சிறுவன் நசத் (அடிவாங்கி) மட்டுமே, படத்தை போரடிக்காமல் கொண்டு செல்ல பலவாறு பயன்பட்டிருக்கிறார். மைண்ட் வாய்ஸ் காமெடியில் கலக்குகிறார் இந்த சிறுவன் தமிழ் சினிமாவில் காமெடி சிறுவர்கள் இல்லாத குறையை நிச்சயம் நிரப்புவார் என்றே சொல்லலாம். படம் முழுக்க மைண்ட் வாய்ஸ், உடல் மொழி, வசனங்கள் என நசத் கிடைக்கும் கேப்பில் மனதில் சேர் போட்டு அமர்கிறார்.

சமுத்திரகனி வழக்கமான கருத்து கந்தசாமியாக இந்தப் படத்திலும் சாதி ஒழிக, என வசனம் பேசும் பெரியார் பேரன் . கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை. கருத்து சொல்வது என்றால் கைவந்த கலையாயிற்றே இந்தப்படத்திலும் சோடை போகவில்லை. குறிப்பாக கிளைமாக்ஸில் தனது மகனுக்கு தன் சிறுவயது கதையை கூறி மகனை திருத்துவது பாசப் போராட்டத்தில் உச்சம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சங்கவி. சில இடங்களில் குணச்சித்திர நடிகையாக மிளிர்ந்தாலும் கதாப்பாத்திரத்தின் தன்மை அறியாமல் கிராமத்திலும் high heels போட்டுக்கொண்டு திரிவது அபத்தமாக உள்ளது.

அவசியமே இல்லாத சென்ராயன் பாடல், ராஜாஜி லவ் போர்ஷன்கள், சமுத்திரகனி சங்கவி போர்ஷன்கள் என எல்லாமே படத்தில் திணிக்கப்பட்ட கோப்புக் காட்சிகளாகவே செல்கின்றன.

கதையில் நாத்திகவாதி போர்வை எதற்கு, கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் அவர் பிள்ளை ஒழுக்கமற்றவராக இருக்குமோ என்ற சிந்தனை எழுகிறது.

கதையில் ஆழமான காட்சியமைப்புகளும், அப்பா, அம்மாவை பெரிதாகக் காட்டும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் மிஸ்ஸிங். படமும் மிஸ்ஸிங் பாணியில் கடந்து சென்றுவிடுகிறது.

ஒரே கிராமம், திரும்ப திரும்ப சிறுவர்களின் சேட்டை, சண்டைகள், காதல் காட்சிகள் என இதைத் தாண்டி இயக்குனர் தன்ராம் பெரிதாக யோசிக்கவில்லையே எனத் தோன்றுகிறது.

ஒற்றைப்பாறை, ஏரிக்கரை என எதார்த்தமான கிராமத்தை அழகாக பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜயன் முனுசாமி, நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கலாம். எடிட்டிங் குறிப்பிடும்படியாக இல்லை

‘மூடர் கூடம் ‘அளவிற்கு ஒரு படம் கொடுத்த நவீன் மாதவ் இணைந்து திரைக்கதை எழுதியும் பெரிய சிறப்பு எதுவும் இல்லை.

இருப்பினும் சிறுவர்கள் எப்படி வளரக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது இந்தப் படம் என்பதால் பாராட்டலாம்

Conclusion:‘கொளஞ்சி‘ போன்ற சேட்டைக்கார சிறுவர்கள் படத்தை பார்த்தால் ஒருவேளை திருந்த வாய்ப்புகள் இருக்கலாம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.