'மேயாத மான்' பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் 'ஆடை'. அவரது முன்னாள் கணவர் ஏ.எல். விஜய், ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டது. மற்றொன்று ஆடை படத்தில் 'ஆடை' இல்லாமல் நடித்திருப்பதால் வெடித்திருக்கும் சர்ச்சை என சமீபத்தில் அதிகளவில் அவர் பேசப்பட்டுவருகிறார். ஆனால் விமர்சனங்களை தவிடுபொடியாக்கி படத்திற்கான புரொமேஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், ஆடை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமலா பால், 'நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர்தான் என் தன்னம்பிக்கைக்கு ஒளி விளக்காக இருக்கிறார். அவர் இல்லையென்றால் முழு மனதுடன் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருக்க முடியாது. அன்புக்குரிய காதலன் எனக்காக பல தியாகங்களை செய்துள்ளார். என் கண்களை திறந்தவர்' என புகழாரம் சூட்டினார்.
அமலா பால் தனது காதல் குறித்து முதல் முறையாக மெளனம் கலைத்துள்ள நிலையில், அமலா பால் ஒரு ஆணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனைப் பார்த்த பலரும் இவர்தான் அமலா பாலின் காதலர் என கூறி வருகின்றனர். அமலா பாலிடம் ட்விட்டரில் இதுகுறித்து கேள்வி கேட்டுள்ளனர்.