ETV Bharat / sitara

காவல் துறையின் காட்டப்படாத பக்கத்தைக் காட்டியிருக்கும் 'காவல்துறை உங்கள் நண்பன்' - காவல் துறை உங்கள் நண்பன் இசை வெளியீடு

காவல் துறையின் காட்டப்படாத பக்கத்தைக் காட்டியிருக்கும்விதமாக உருவாகியிருக்கும் காவல்துறை உங்கள் நண்பன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Kaval thurai ungal nanban movie
Kaval thurai ungal nanban movie audio launch
author img

By

Published : Mar 12, 2020, 9:16 AM IST

சென்னை: ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'காவல்துறை உங்கள் நண்பன்' இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுது.

பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், ஒயிட் மூன் டாாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்துக்குத் தேவையான கருத்தை அழுத்தமாகக் கூறும் படைப்பாகத் தயாராகியிருக்கும் படத்தை இயக்குநர் ஆர்டிஎம் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர் படம் குறித்து பேசினார்கள்.

நடிகர் மைம் கோபி பேசியதாவது:

உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது. இயக்குநர் ஆர்டிஎம் மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாகத் திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி.

சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டுத்தனமாக அவர் மாறுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும்.

படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். கிளைமேக்ஸ் காட்சி பலரையும் அதிரவைத்து, மனத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்றார்

கதாநாயகன் சுரேஷ் ரவி பேசியதாவது:

இயக்குநர் ஆர்டிஎம், நான் இணைந்து படம் செய்ய வேண்டும் என எட்டு ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன்வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுக்கு நன்றி. அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன் அமைந்திருந்ததுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்தது.

அந்த வகையில் 'காவல்துறை உங்கள் நண்பன்' படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது. காவல் துறை பற்றிய நல்லவற்றை பல படங்கள் சொல்லிய நிலையில், இப்படம் அதன் வேறொரு முகத்தைக் காட்டும்.

எல்லாத் துறையிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும். இதில் நாங்கள் காவல் துறையின் காட்டப்படாத பக்கத்தைக் காட்டியுள்ளோம் என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஆதித்யா பேசியதாவது:

'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தில் எனது பயணம் மிக நீண்டதொரு அழகான பயணம். இப்படத்தில் பங்கு கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள்.

படத்தை ரசிகர்கள், விமர்சகர்கள் எவ்வாறு வரவேற்பார்கள் என்பதைப் பார்க்க வெகு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:

இப்படத்தை தமிழின் மிக முக்கிய இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டினோம். அனைவரும் படத்தை வெகுவாக ரசித்ததோடு, படத்தை தங்கள் படம் போல் கருதி விளம்பரப்படுத்தப் போவதாகக் கூறினார்கள். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக 'காவல்துறை உங்கள் நண்பன்' இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.