சென்னை: பாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான படம் 'அந்தாதூன்'. டார்க் காமெடி க்ரைம் த்ரில்லர் கலந்த இப்படத்தில், கண் பார்வை குறைபாடு உள்ளவராக ஆயுஷ்மான் நடித்திருந்தார். ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாது பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் பெற்றுள்ளார். அவர் தனது மகனும் நடிகருமான பிரசாந்தை வைத்து இந்தப் படத்தை தமிழிலில் ரீமேக் செய்துள்ளார். இதில், பிரசாந்த்துடன் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10ஆம் தேதி பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில், நவரச நாயகன் கார்த்திக் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.