சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். ரெஜினா விஜயன், லால் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தினை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடலை இதுவரை யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்
முதல் பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இரண்டாவது பாடல் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது நடிகர் தனுஷின் ரசிகர்கள், மாரி செல்வராஜின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் இயக்கும் ”தோப்புக்கரணம்”!