ETV Bharat / sitara

சித்தார்த் சுக்லா நினைவஞ்சலி: கண்கலங்கிய கரண் ஜோஹர் - சித்தார்த் சுக்லா

2014ஆம் ஆண்டு கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியான ‘ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா’ படத்தில் சித்தார்த் சுக்லா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் சுக்லா நினைவஞ்சலி: கண்கலங்கிய கரண் ஜோஹர்

author img

By

Published : Sep 6, 2021, 6:50 PM IST

மும்பை: பிக் பாஸ் 13ஆவது சீசன் வெற்றியாளர் சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். பிக் பாஸ் ஓடிடியில் அவருக்காக நினைவஞ்சலி செலுத்தும்போது, இயக்குநர் கரண் ஜோஹர் கண்கலங்கிப் பேசினார்.

பலிகா வது எனும் டிவி தொடரின் மூலம் பிரபலமானவர் சித்தார்த் சுக்லா. அதன்பிறகு பிக் பாஸ் 13ஆவது சீசனில் வெற்றிப்பெற்றதால் மேலும் பிரபலமானார். இவர் செப்டம்பர் 2ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட காட்சிகளை தொகுத்து, அவருக்கான அஞ்சலியாக பிக் பாஸ் ஓடிடி வெளியிட்டது. அப்போது கரண் ஜோஹர், சுக்லாவின் திடீர் மறைவு அனைவரையும் உணர்வற்ற நிலைக்கு தள்ளிவிட்டது. என்னால் சுவாசிக்கக் கூடிய முடியவில்லை. அவன் மிகவும் நல்லவன், நல்ல நண்பன். அவனுடைய சிரிப்பு லட்சக்கணக்கான இதயங்களை வென்றது என கண்கலங்கி பேசினார்.

2014ஆம் ஆண்டு கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியான ‘ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா’ படத்தில் சுக்லா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கார்த்தி பட நடிகை கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.