ETV Bharat / sitara

திடீரென தற்கொலைக்கு முயன்ற கன்னட நடிகை - கன்னட நடிகை சைத்ரா கொட்டூர்

கன்னட நடிகை சைத்ரா திடீரென தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகை
கன்னட நடிகை
author img

By

Published : Apr 9, 2021, 8:06 PM IST

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைத்ரா கொட்டூர். இவர் கன்னட மொழிப் படங்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவரும் நாகர்ஜூனா என்பவரும், காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு நாகர்ஜூனாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் முடிந்த நாளன்றே நாகர்ஜூனா காவல் நிலையத்தில், தனக்கு நடந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், வலுக்கட்டாயமாகத் தான் சைத்ராவின் கழுத்தில் தாலி கட்டியதாகப் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் சைத்ராவை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், நாகர்ஜூனைவை காதலிப்பதாகவும் அவருடன் தான் செல்வேன் என்று உறுதியாகக் தெரிவித்துள்ளார். ஆனால் நாகர்ஜூனா, தன்னுடைய குடும்பம் தான் முக்கியம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சைத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

சைத்ரா கொட்டூர் திருமண புகைப்படம்
சைத்ரா கொட்டூர் திருமண புகைப்படம்

இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை கேள்விக்குறியானதால் மனமுடைந்த சைத்ரா நேற்று (ஏப்.8) தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோலாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தீபிகா படுகோனேவின் கணவராக இருப்பது பெருமை - நடிகர் ரன்வீர் சிங்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.