ETV Bharat / sitara

ஜெயலலிதா பிறந்தநாள் - தலைவி கங்கனாவின் லேட்டஸ்ட் லுக் - தலைவி படத்தில் கங்கனாவின் லேட்டஸ்ட் லுக்

அரசியலில் காலடி எடுத்து வைத்த புதிதில் அதிமுக கொடி பார்டராக கொண்ட சேலை அணிந்த ஜெயலலிதாவின் தோற்றத்தை கங்கனா வடிவில் கொண்டு வரும் விதமாக 'தலைவி' படத்தின் லேட்டஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Kangana unveils latest look for Thalaivi movie
Actress Kangana ranaut
author img

By

Published : Feb 24, 2020, 12:11 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'தலைவி' படத்தின் லேட்டஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் நடிகை கங்கனா ரணவத்.

நான்கு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து மறைந்த ஜெ. ஜெயலலிதாவுக்கு இன்று 72ஆவது பிறந்தநாள். இதை முன்னிட்டு தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நடிகை கங்கனா ரணவத் நடித்து வரும் 'தலைவி' படத்தின் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கொடியை பார்டராக கொண்டு வெள்ளை நிறப் புடவை அணிந்து, அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த புதிதில் ஜெயலலிதாவை எடுத்த புகைப்படம் ஒன்று மிகப் பிரபலமானதாக இருக்கிறது.

அந்தப் புகைப்படம் நடிகை கங்கனா மேற்பார்வையில் செயல்பட்டு வரும் டீம் கங்கனா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், சிறந்த பெண்மனி ஜெ. ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளில் நினைவாக இது வெளியிடப்பட்டுள்ளதாகவும், துணிச்சல் மிகுந்த குணத்தையும், தலைமைப் பண்பையும் அவரது வாழ்க்கை பேசுகிறது என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன் நடிகை கங்கனா ஜெயா அம்மாவை நேசிப்பதுடன், அவர் கற்பித்தவற்றை பின்தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அதேபோன்ற லுக்கில் கங்கனா எடுத்துக்கொண்டு புகைப்படத்தை பதிவிட்டு, ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'தலைவி' படத்தின் புதிய லுக் வெளியீடு.

ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படம் அவரது வாழ்கை பற்றி பலரும் அறிந்திராத விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டவுள்ளது என்று பதிவிடப்பட்டுள்ளது.

'தலைவி' படம் தொடங்கியதும் டீஸர் ஒன்றை வெளியிட்ட படக்குழுவினர், அவ்வப்போது படம் குறித்து அப்டேட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

படத்தின் எம்ஜிஆர்-ஆக நடிக்கும் அரவிந்த் சாமியின் கேரக்டருக்கான டீஸரை, எம்ஜிஆர்-இன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர். இதையடுத்து தற்போது ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் நாயகி கங்கனா அச்சு அசல் அவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் புதிய லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.