சமாஜ்வாதி கட்சி எம்.பி.யும் நடிகையுமான ஜெயா பச்சன் மாநிலங்களவையில் பேசுகையில், 'சிலர் பாலிவுட்டை இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு எதிராக பாலிவுட் மீட்கப்பட வேண்டும். நடிகை கங்கனா ரணாவத் தனக்கு உணவு கொடுத்த கையை வெட்டுகிறார்' என குற்றஞ்சாட்டினார்.
இதனையடுத்து இதற்குப் பதிலளித்துள்ள கங்கனா, "பாலிவுட் என்ன கொடுத்தது , 2 நிமிட ரோல், ஐட்டம் பாடல், அதுவும் ஹீரோவுடன் தனிமையில் இருந்த பிறகு' என கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், 'ஹீரோயின் மையமுள்ள, தேசபக்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனது சொந்த விதியை தானே மாற்றியதாகவும், அவரது மகள் ஸ்வேதா, துன்புறுத்தப்பட்டால் அல்லது மகன் அபிஷேக் கொடுமைப்படுத்தப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் இதேபோல் பேசுவாரா, கொஞ்சம் கருணை காட்டுங்கள்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பாலிவுட்டில் போதைப்பொருள் புழக்கம் அனைத்து பார்ட்டிகளிலும் தாராளமாக இருப்பதாகவும், பிரதமரின் ’தூய்மை இந்தியா’ திட்டம் போல் பாலிவுட்டில் உள்ள இந்த போதைப்பொருள் பழக்கம் எனும் சாக்கடையை ஒழிக்க வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.
மேலும், பாலிவுட்டின் சிறந்த நட்சத்திரங்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருக்கு ரத்த பரிசோதனை செய்யுமாறு அவர் சவால் விடுத்தார். இதற்கு பல நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...சன்னி லியோன் குறித்துப் பேசி போலி பெண்ணியவாதிகளை சாடிய கங்கனா!