பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வரும் கங்கனா ரனாவத் அடிக்கடி சர்ச்சைக்கூறிய கருத்துகளை வெளியிட்டுவருகிறார். இதனால் அவரது ட்விட்டர் பக்கம்கூட சமீபத்தில் தடைசெய்யப்பட்டது.
இதனிடையே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது குறித்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கங்கனா ரனாவத் நேற்று (டிசம்பர் 3) பஞ்சாப் மாநிலத்தில் கிர்தாட்பூர் சாஹிப் வழியாகத் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது விவசாயிகள் சிலர் அவரின் காரை முற்றுகையிட்டனர். விவசாயிகளுக்கு எதிரான கருத்துகளைப் பேசிய கங்கனா மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைந்தபோது எனது காரை ஒரு கும்பல் முற்றுகையிட்டது. என்னைத் திட்டியதோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டிது. எனக்குப் பாதுகாப்பு இல்லை என்றால் என்ன நடந்திருக்கும்? நான் என்ன அரசியல்வாதியா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மகான்' டப்பிங் பணிகள் நிறைவு; பொங்கலுக்கு ரிலீஸ்?