ETV Bharat / sitara

குருவுக்கு மரியாதை செலுத்திய ரஜினி - கமல்! இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு - பாலசந்தர் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்

மறைந்த இயக்குநரும் தனது குருநாதருமான கே. பாலசந்தருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது திருஉருவ சிலையை தனது நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து திறந்துவைத்துள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.

இயக்குநர் பாலசந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தும் ரஜினி - கமல்
author img

By

Published : Nov 8, 2019, 12:01 PM IST

சென்னை: ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன அலுவலகத்தில் மறைந்த இயக்குநரும் தனது குருநாதருமான கே. பாலசந்தர் திருஉருவச் சிலையை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

உலகநாயகன் கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக நவம்பர் 7, 8, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தை சீனிவாசன் சிலையை நேற்று திறந்துவைத்துப் பேசினார். மேலும், பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையத்தையும் தொடக்கிவைத்தார்.

இதையடுத்து தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் புதிய அலுவலகத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே. சாலையில் அமைத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்தக் கட்டடத்தை திறப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், நடிகர் நாசர், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Balachander statue opening function
இயக்குநர் பாலசந்தர் சிலை விழா நிகழ்வு

விழாவில், மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் சிலை, ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கட்டட முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.

Kamalhassan and Rajinikanth in Balachander statue opening
இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

நிகழ்ச்சியில் இயக்குநர் பாலசந்தர் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி இயக்குநர் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட இயக்குநர்கள், நடிகர், நடிகைகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் காந்தியின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த 'ஹேராம்' படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டு, கலந்துரையாடல் நடக்கவிருக்கிறது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

Intro:இயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாBody:சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன அலுவலகத்தில், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் திருவுருவ சிலையை நடிகரும் மக்கள் கமல்ஹாசன் திறந்து வைக்கிறார்.

அதேபோல் நடிகர் கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக நவம்பர் 7, 8 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் நேற்று கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான பரமகுடியில் அவரது தந்தை ஸ்ரீநிவாசதேசிகன் சிலையை திறந்து வைத்து பேசினார். மேலும், பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர் திறன் மேம்பாட்டு மையத்தையும் கமல்ஹாசன் துவங்கி வைத்தார்.

நவம்பர் 8ம் தேதியான இன்று , நடிகர் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தை திறப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் , நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் அவர்களின் சிலையும், ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கட்டிட முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையையும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பாலச்சந்தர் குடும்பத்தினர் அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார், வைரமுத்து, மணிரத்தினம் மற்றும் பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல், சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் காந்தியின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹேராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு, கலந்துரையாடல் நடக்க இருக்கிறது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்கேற்கிறார். Conclusion:மேலும் ஹேராம் படக்குழுவினரும் கலந்துகொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.