துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் ‘துப்பாக்கி’. கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிந்திருந்தார். விஜய்யின் திரைப்பயணத்திலேயே இது மாபெரும் வெற்றிப்படமாக மாறியது.
அதன்பிறகு முருகதாஸ் - விஜய் கூட்டணியில் கத்தி, சர்கார் ஆகிய படங்கள் வந்து வெற்றி பெற்றாலும், துப்பாக்கி-2 எப்போது என விஜய் ரசிகர்கள் முருகதாஸிடம் கேள்வி எழுப்பி வந்தனர். ‘துப்பாக்கி’ படத்தில் விஜய் அந்த அளவுக்கு ஸ்டைலிஷாக இருப்பார்.
ஏ.ஆர். முருகதாஸ் ‘துப்பாக்கி 2’ படத்துக்கு கதையை ரெடி செய்து கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்தன. தற்போது ‘துப்பாக்கி 2’ படத்தில் விஜய்க்கு பதில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அந்த வாய்ப்பு கமல்ஹாசனுக்கு கிடைத்தால், விஸ்வரூபம் படத்தில் கழட்டி வைத்த ராணுவ உடையை அவர் மீண்டும் அணிய வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க: வெளிநாடு பறக்கும் வெற்றிமாறனின் தமிழ்வேல்!