ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தின் மூலம், ரம்மி விளையாட்டின் விதிகளில் புரட்சியை ஏற்படுத்தி, புதுமையான வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் கேமிங் தளமான கெல்ப்ளே ரம்மியின் விளம்பரத் தூதராக, பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
"நான் பொழுதுபோக்குக்காக சிறிது காலம் ரம்மி விளையாடி வருகிறேன். இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ரம்மி நிறுவனங்களில் ஒன்றான கெல்ப்ளே ரம்மி நிறுவனத்தின் தற்போது இணந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்" என ரம்மி விளையாட்டில் பெரும் ஆர்வமுள்ள நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் ரம்மி மீதான ஆர்வம் அதிகரித்து வருவதையும், ரம்மி விளையாட்டை விளையாடுவதற்கு டிஜிட்டல் தளங்களின் மூலம் வழிவகை செய்துள்ள, கெல்ப்ளே ரம்மி நிறுவனத்தின் முயற்சி பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறினார்.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு வாக்கில் இந்திய ஆன்லைன் விளையாட்டுத் துறை 11,900 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், 30 லட்சம் பயனாளிகளின் தரவுகளைக் கொண்டு, கெல்ப்ளே ரம்மி நிறுவனம் புதிய வசதிகளுடன் தற்போது ஆன்லைன் விளையாட்டு சந்தையில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
சோலோ காமெடி வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் - நடிகர் சாம்ஸ்