ETV Bharat / sitara

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டைப் பெற்ற அறிமுக ஒளிப்பதிவாளர் - காடன் பட ஒளிப்பதிவாளர்

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'காடன்' திரைப்படத்தின் சிறப்பான ஒளிப்பதிவுக்காக அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக்குமாரை நடிகர்கள் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் பாராட்டியுள்ளனர்.

kadan
kadan
author img

By

Published : Mar 28, 2021, 12:56 PM IST

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'காடன்'. இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் முதல் படமே நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். நீரவ்ஷாவுடன் 'மதராசப்பட்டிணம்', 'தெய்வத்திருமகள்', 'வேட்டை', 'தலைவா', 'தாண்டவம்', 'சைவம்', 'காவியத் தலைவன்' ஆகிய படங்களுக்கு உதவியாளராக இவர் பணியாற்றி இருக்கிறார். மேலும், ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் 'தர்மதுரை', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களுக்கும் உதவியாளராக அசோக்குமார் பணியாற்றியுள்ளார்.

kadan
ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்

இப்படங்களில் அசோக்குமாரின் திறமையைப் பார்த்த இயக்குநர் பிரபு சாலமன், 'காடன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இப்படம் குறித்து ஏ.ஆர்.அசோக்குமார் கூறியதாவது, "என்னை நம்பி காடன் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்பை கொடுத்த இயக்குநர் பிரபு சாலமனுக்கு நன்றி. முதல் படமே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி. நான் அறிமுக ஒளிப்பதிவாளர் என்று பார்க்காமல், நடிகர்கள் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் என்னுடன் நட்பாகப் பழகியது என்னை ஆச்சரியப்படுத்தியது. அதுமட்டுமல்லாது ராணா, விஷ்ணு விஷால் இருவரும், விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்கள்.

kadan
ராணா விஷ்ணு விஷாலுடன் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக் குமார்

'காடன்' படத்திற்காக தாய்லாந்து, புனே, கேரளா வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது சிறந்த அனுபவமாக இருந்தது. முழு படத்தையும் பார்த்த படக்குழுவினர், பொதுமக்கள் அனைவரும் என்னைப் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. ராணா, விஷ்ணு விஷால், இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோர் பாராட்டில் மெய் சிலிர்த்துப் போனேன். இவர்களின் பாராட்டு இன்னும் உத்வேகத்துடன் பணியாற்ற உற்சாகப்படுத்தி இருக்கிறது.

தற்போது, சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், சீனு ராமசாமியின் சகோதரர் இயக்கத்தில், திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் புதிய படமான 'அழகிய கண்ணே' படத்தில் பணியாற்றி வருகிறேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.