ETV Bharat / sitara

'காப்பான்' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு - ஆர்யா

'என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'காப்பான்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

காப்பான்
author img

By

Published : Jul 17, 2019, 3:17 PM IST

Updated : Jul 17, 2019, 4:08 PM IST

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர் சூர்யா மூன்றாவது முறையாக இணையும் படம் 'காப்பான்'. இவர்களின் கூட்டணியில் 'அயன்' திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. நல்ல வசூலையும் ஈட்டியது. அடுத்து வந்த மாற்றான் பெரியதாக ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், மூன்றாவது முறையாக காப்பான் படம் மூலம் கே.வி.ஆனந்தும், சூர்யாவும் இணைந்துள்ளனர். இதனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. படத்தில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

காப்பான்
காப்பான்

ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் டிரெய்லர், சிரிக்கி எனும் சிங்கிள் ட்ராக் ஆகியவை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் முழுப் பாடல்களும் வரும் 21ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது. இசை வெளியீட்டு விழா, திருவான்மியூரில் நடக்க உள்ளது. இந்த அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Intro:Body:

KAPAAN AUDIO LAUNCH 

Conclusion:
Last Updated : Jul 17, 2019, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.