ETV Bharat / sitara

மீண்டும் தனது ரசிகையை ஆச்சரியப்படுத்திய பாப் இசை மன்னன் ஜஸ்டின் பீபர் - ஜஸ்டீன் பீபர் பாடல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பத்து வருடங்களுக்கு பின் மீண்டும் ஜஸ்டின் பீபர் தனது தீவிர ரசிகையான லின்சி மிக்கோலாஸை சந்தித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Justin Bieber
Justin Bieber
author img

By

Published : Feb 28, 2020, 1:24 PM IST

அமெரிக்காவின் பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் ஜஸ்டின் பீபர் தனது தீவிர ரசிகையான லின்சி மிக்கோலஸை நேரில் சந்தித்தார்.

இதுகுறித்து செய்தித்தாள் ஒன்றில் கூறுகையில், மிக்கோலஸின் சமூக வலைதளமான யூடியூப்பில் நடைபெற்ற ஆவணப்பட சீசனின் இறுதி நிகழ்ச்சியில் ஜஸ்டின் தோன்றி ஆச்சரியப்படுத்தினார்.

பின் தடயவியல் வேதியியல் நிபுணரான மிக்கோலஸ், 2010 ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடந்தது குறித்து நினைவுகூர்ந்தார். அவர் கூறுகையில், உண்மையைச் சொல்வதென்றால் எல்லாமே மிக விரைவாக நடந்தது. அந்த இரவில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. எதுவும் நினைவில் இல்லை. ஜஸ்டின் பீபரின் மேலாளர் ஆலிஸ்சன் என்னை நிகழ்ச்சி நடந்த மேடைக்கு பின்னால் அழைத்துச்சென்றார். நீ மட்டும்தான் ஜஸ்டின் பீபரை சந்திக்கப்போகிறாய். அவர் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் ஏன் அவ்வாறு பதட்டமாக இருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.