பிரபுதேவா, ஹென்சிகா மோத்வானி, ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்களின் கூட்டத்தை வைத்து 'குலேபகாவலி' எனும் கலகலப்பான படத்தை இயக்கி அறிமுகமானவர் கல்யாண். இப்படத்தைத் தொடர்ந்து, ஜோதிகா முதன்மை கேரக்டரில் நடிக்கும் 'ஜாக்பாட்' எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தில், ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
சூர்யாவின் 44ஆவது பிறந்தநாளான இன்று 'ஜாக்பாட்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘உன்கிட்ட யாரு பிரச்னை பண்றது... ராகவனா... வால்டர் வெற்றிச் செல்வனா.. அன்புச்செல்வன் ஐபிஎஸா என்று மன்சூர்அலிகான் கேட்பதற்கு, எதிர்முனையில் கிடைத்த பதிலை கேட்டு... அய்யோ அவளுகளா..? என்று பயத்துடன் சொல்வதும், அதற்கு பிறகு மாஸாக ஜோதிகாவும், ரேவதியும் என்ட்ரி ஆவதும் ரகளையாக உள்ளது.
இருவரும் நல்லது பண்ணுவதற்காக, இன்ஸ்பெக்டர், கால்நடை மருத்துவர் என பல வேடங்கள் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். அப்போது, நடக்கும் அதிரடியான பஞ்ச் வசனங்கள், சண்டை, காமெடி, கார் சேஸ் என கலகலப்பாக நகர்கிறது ட்ரெய்லர். அமைதியான ரோல்களில் நடித்து வந்த ஜோதிகா, இந்தப்படத்தில் ஆக்சன் ஹீரோவுக்கு இணையாக அதிரடியாக சண்டை போட்டும், காமெடியும் செய்துள்ளார்.
-
Thank you all for your warm wishes!! Here’s #JackpotTrailer Jo’s first Action Comedy! #ReleasingAug2https://t.co/7LruypjUyG#Jyotika #Revathi @DirKalyan @rajsekarpandian @2D_ENTPVTLTD @iYogiBabu @anandakumardop @Composer_Vishal @SF2_official @editorvijay @SonyMusicSouth
— Suriya Sivakumar (@Suriya_offl) July 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you all for your warm wishes!! Here’s #JackpotTrailer Jo’s first Action Comedy! #ReleasingAug2https://t.co/7LruypjUyG#Jyotika #Revathi @DirKalyan @rajsekarpandian @2D_ENTPVTLTD @iYogiBabu @anandakumardop @Composer_Vishal @SF2_official @editorvijay @SonyMusicSouth
— Suriya Sivakumar (@Suriya_offl) July 23, 2019Thank you all for your warm wishes!! Here’s #JackpotTrailer Jo’s first Action Comedy! #ReleasingAug2https://t.co/7LruypjUyG#Jyotika #Revathi @DirKalyan @rajsekarpandian @2D_ENTPVTLTD @iYogiBabu @anandakumardop @Composer_Vishal @SF2_official @editorvijay @SonyMusicSouth
— Suriya Sivakumar (@Suriya_offl) July 23, 2019
குலேபகாவலி படம்போல ஜாக்பாட் படமும் கலகலப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பது டிரெய்லரில் தெரிகிறது. இந்தப்படம் வரும் ஆக.2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.