jhansi web series: திரு இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் 'ஜான்சி' இணையத் தொடர் உருவாகியுள்ளது. இதனை டிரைபல் ஹார்ஸ் என்டெர்டெய்ன்மென்ட் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
அஞ்சலி முழு நீள அதிரடி வேடத்தில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும். இந்த இணையத்தொடர் ஒரு முழு நீள ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.
இத்தொடர் பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் இருக்கையின் நுனியில் அமரவைக்கும் பரபர திரில் பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரில் அஞ்சலி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜூன், சரண்யா ஆர், சம்யுக்தா ஹோமத் உள்ளிட்டோருடன் பல முன்ணனி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
பண்டிகை மற்றும் டிக்கிலோனா படப்புகழ், அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை யானிக் பென் அமைத்துள்ளார். இவர் தி ஃபேமிலி மேன் தொடரின் அதிரடி சண்டைக் காட்சி அமைப்பின் மூலம் மூலம் உலகளவிலான ரசிகர்களை மிரள வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 'ஜான்சி' இணையத் தொடரானது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக இயக்குநர் சங்கத்தில் தீர்மானம்