நடிகர் நானி நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் 'ஜெர்ஸி'. கவுதம் தின்னூரி இயக்கிய இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக நானி நடித்திருந்தார்.
36 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் சாதிக்கத் துடிக்கும் ஒரு துடிப்பான கிரிக்கெட் வீரரின் கதையே 'ஜெர்ஸி'. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இத்திரைப்படம் கனடாவில் நடைபெறும் டொராண்டோ சர்வதேச ஃபிலிம் விழாவில் (Toronto International Film Festival) திரையிடப்படவுள்ளது. ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 'ஜெர்ஸி' திரைப்படம், திரையிட தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.