சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்கத் தடைவிதிக்கக் கோரி தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர்கள் விஜய், கெளதம் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் தமிழிலும், 'ஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல். விஜய் திரைப்படம் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இதேபோல இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக போஸ்டரும் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து தலைவி படத்தையும் இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்குத் தெரியும் என்றும் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால் தன்னுடைய அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என தீபா தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இந்தக் கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்திரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு, ஜெயலலிதாவின் கண்ணியத்துக்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக நவம்பர் 14ஆம் தேதிக்குள் இயக்குநர்கள் விஜய், கெளதம் மேனன் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.
ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர்கள் விஜய், கெளதம் மேனனுக்கு நீதிமன்றம் உத்தரவு - ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்திரிக்கப்படலாம், அவரது கண்ணியத்துக்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கோரி நீதிமன்றத்தில் ஜெ. தீபா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர்கள் விஜய், கெளதம் மேனன் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்கத் தடைவிதிக்கக் கோரி தீபா தொடர்ந்த வழக்கில் இயக்குநர்கள் விஜய், கெளதம் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் தமிழிலும், 'ஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல். விஜய் திரைப்படம் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இதேபோல இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக போஸ்டரும் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து தலைவி படத்தையும் இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்குத் தெரியும் என்றும் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால் தன்னுடைய அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என தீபா தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இந்தக் கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்திரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு, ஜெயலலிதாவின் கண்ணியத்துக்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக நவம்பர் 14ஆம் தேதிக்குள் இயக்குநர்கள் விஜய், கெளதம் மேனன் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இதே போல் கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்கு தெரியும் என்றும் படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்க கூடாது என தீபா தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்த தீபா தரப்பு, ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது..
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக நவம்பர் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர்கள் விஜய் மற்றும் கவுதம் மேனன் உள்ளிடோருக்கு உத்தரவிட்டார்.Conclusion: