சென்னை: கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான படம் ’சுல்தான்’. ட்ரீம் வாரியர் தயாரித்துள்ள, இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகி பாபு, கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்ஷர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்திருந்தார். இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்திக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் சுல்தான்...’ பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்பாடல் யூ-ட்யூப் தளத்தில் ஏழரை கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்தைக் கடப்பதற்கு முன்னரே பத்து லட்சம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐந்து மணிநேரத்தில் 10 லட்சம் பார்வைகள்: விஷால் பட டீசர் சாதனை