'கூட்டத்தில் ஒருவன்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'ஜெய் பீம்'. சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இப்படத்தில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம், 1993ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இதில் சூர்யா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவர் நீதிபதியாக, இருந்தபோது நடந்த வழக்கில் பழங்குடி பெண்ணிற்கு நீதி பெற்றுத் தந்ததை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
Here’s #JaiBhim Teaser for you!
— Suriya Sivakumar (@Suriya_offl) October 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tamil - https://t.co/lJ4mat1vS5
Telugu - https://t.co/iT8vp3OmEw
Watch #JaiBhimOnPrime Nov 2 @PrimeVideoIN @tjgnan @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit #Jyotika @rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/FrxaVluTT2
">Here’s #JaiBhim Teaser for you!
— Suriya Sivakumar (@Suriya_offl) October 15, 2021
Tamil - https://t.co/lJ4mat1vS5
Telugu - https://t.co/iT8vp3OmEw
Watch #JaiBhimOnPrime Nov 2 @PrimeVideoIN @tjgnan @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit #Jyotika @rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/FrxaVluTT2Here’s #JaiBhim Teaser for you!
— Suriya Sivakumar (@Suriya_offl) October 15, 2021
Tamil - https://t.co/lJ4mat1vS5
Telugu - https://t.co/iT8vp3OmEw
Watch #JaiBhimOnPrime Nov 2 @PrimeVideoIN @tjgnan @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit #Jyotika @rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/FrxaVluTT2
இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் டிஸர் இன்று (அக்.15) வெளியாகியுள்ளது. அதில், "மூன்று காவலர்களை எதிர்ப்பதற்காக இல்லை. அரசை எதிர்த்து’ என அவர் பேசிய வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக 'ஜெய் பீம்' நவம்பர் 2ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது.
இதையும் படிங்க: அடித்தது லக்... நயன்தாராவுடன் கூட்டணி போட்ட பிக்பாஸ் கவின்