'குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் நடிகை ஜோதிகா, நடிகை ரேவதியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இயக்கி உள்ள படம் 'ஜாக்பாட்'. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில், யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

அப்போது அவர் பேசுகையில், ”ஜோதிகா இப்படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். அம்மாவாக தனது குழந்தைகளை கவனிக்கவும் தவறவில்லை. பிள்ளைகளை பள்ளிகூடத்திற்கு அனுப்பிவிட்டுதான் இப்படத்திற்காக சிலம்பம் கற்கவும், நடனம் கற்கவும் செல்வார். இவரிடம் இருந்துதான் ஒரு படத்திற்காக கடின உழைப்பையும் அர்பணிப்பையும் நான் கற்றுக்கொண்டேன்” என்றார்.