செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் ’கோப்ரா’. பல விதமான கெட்டப்புகளில் விக்ரம் நடிக்கும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிளிக் செய்யப்பட்ட சில புகைப்படங்களை இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட் வீரராக கண்டுகளித்த இர்பான் பதானை, நடிகராக பார்க்க ஆவலாக இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.