ETV Bharat / sitara

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து; கமல்ஹாசன் நேரில் ஆஜராக அவசியமில்லை - உயர் நீதிமன்றம்

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விபத்து நடந்த இடத்தில் நாளை விசாரணைக்காக நேரில் ஆஜராக அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kamal
kamal
author img

By

Published : Mar 17, 2020, 5:15 PM IST

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக நாளை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி, நிகழ்வு நடந்தது குறித்து நடித்துக் காட்ட வேண்டும் என மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர், நடிகர் கமல் ஹாசனுக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.

ஏற்கனவே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், எனவே நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரியும் நடிகர் கமல் ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் கமல் தரப்பில், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைக்கு மூன்று மணி நேரம் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், அரசியல்வாதியாக இருப்பதால், துன்புறுத்தும் நோக்கத்தோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் விபத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அதே இடத்திற்கு விசாரணைக்கு செல்ல இயலாது என்றும் வாதிடப்பட்டது. மேலும், இது விபத்து வழக்குதானேத் தவிர, கொலை வழக்கு அல்ல என்றும் கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், விபத்து நடந்த போது நடிகர் கமல் நிகழ்விடத்தில் இருந்துள்ளார் என்றும், அவர் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

கமல் மட்டுமல்லாமல் இந்தியன் 2 படத்தின் இயக்குநர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 23 பேருக்கு நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டது.

படத்தின் கதாநாயகன் என்பதற்காக புலன் விசாரணையில் இருந்து விலக்களிக்க முடியாது என்ற அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை எனவும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, நடிகர் கமல் ஹாசன் நாளை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக அவசியமில்லை என்றும், புலன் விசாரணைக்குப் பின்னர் தேவைப்படும் பட்சத்தில் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நடிகர் கமலுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: விபத்து நடந்ததை நடித்துக் காட்டச்சொல்லி காவல் துறை வற்புறுத்தல்: உயர் நீதிமன்றத்தில் கமல் முறையீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.