ETV Bharat / sitara

அஜித், சூர்யா படங்களுக்கு அதிகரிக்கும் திரையரங்குகள்! - chennai latest news

அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகியப் படங்களும் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

increasing-theaters-for-ajith-and-surya-films

author img

By

Published : Mar 13, 2022, 6:05 PM IST

Updated : Mar 13, 2022, 6:10 PM IST

சென்னை : ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'வலிமை'. இப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

அதேபோன்று பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது.

இரண்டு படங்களுக்கும் பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த வாரம் வெளியான பிரபாஸின் ராதே ஷியாம் திரைப்படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால், அப்படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் படம் வெளியிடப்படுகிறது.

இதனால் மேலும் சில திரையரங்குகளில் வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இத்திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் மக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இதையும் படிங்க : கொடைக்கானலில் காட்டுத்தீ..! குரல் கொடுத்த கார்த்தி...

Last Updated : Mar 13, 2022, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.