ETV Bharat / sitara

இசைஞானிக்கு விருது வழங்கி சிறப்பித்த கேரள அரசு - சபரிமலை

இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசால் அறிவிக்கப்பட்டிருந்த ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

Illayaraja
Illayaraja
author img

By

Published : Jan 15, 2020, 7:24 PM IST

இசையில் சிறந்த பங்களிப்பை அளித்துவரும் கலைஞருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேரள அரசால் ’ஹரிவராசனம்’ விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு பூஜையையொட்டி சுவாமி ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் நடந்த விழாவில் இளையராஜாவுக்கு மாநில தேவசம் (கோயில்கள்) அமைச்சர் கடகம்பள்ளி ராஜேந்திரன், இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருதினை வழங்கினார். விருதுடன் ஒரு லட்சம் ரொக்கப் பணத்தையும் வழங்கினார்.

ஹரிவராசனம் விருது 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதினை கே.ஜே. யேசுதாஸ், ஜெயவிஜயா, ரவிச்சந்திரன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எம்.ஜி. ஸ்ரீகுமார், கங்கை அமரன், கே.எஸ். சித்ரா, பி. சுசீலா ஆகியோர் ஏற்கனவே பெற்றுள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.