நாடெங்கும் கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மக்கள் சிரமப்பட்டுவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நபர்களும், கரோனாவால் பாதிப்படைந்தோருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும் பல போராட்டங்களை தினம்தோறும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போராட்ட வீரர்களுக்காக இசையமைப்பாளர் இளையராஜா 'பாரத பூமி' என்ற தலைப்பில் பாடலொன்றை வெளியிட்டுள்ளார். கோவிட் -19 போர்வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பாடலின் வரிகளை இளையராஜாவே எழுதியுள்ளார். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல்களை தமிழ் பதிப்பில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், இந்தியில் சாந்தனு முகர்ஜியும் பாடி உள்ளனர்.
ஊரடங்கு சமயத்தில் கரோனா வைரஸுக்கு எதிராக போராடும் மக்கள், மருத்துவர்கள், காவல்துறையினரின் அவல நிலை வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க... பியானிஸ்ட் விட்டுச் சென்ற 'ஹார்மோனிய பெட்டி': விவேக் கூறிய குட்டிக் கதை