ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள ஹாரர்-காமெடி கதையாக திரைக்கு வரவிருக்கும் படம் 'இடியட்'.
இவர்களைத் தவிர ஆனந்தராஜ், ஊர்வசி, அக்ஷரா கவுடா, ரவி மரியா மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு 'இடியட்'. எல்லோரும் ஒரு முறையாவது முட்டாள்தனமாக நடந்துகொள்ளுவது இயல்பு. அப்படி நடந்து கொள்பவர்களை மையமாக வைத்து
எடுக்கப்பட்டதுதான் 'இடியட்' என்கிறார் இயக்குநர். இந்நிலையில் இப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:Thalaivar 170: ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் இவரா...?