ETV Bharat / sitara

'இடியட்' - திரையரங்கில் வெளியிடுவது உறுதி

மிர்ச்சி 'சிவா' நடித்துள்ள இடியட் திரைப்படம் திரையரங்கில் வெளியிடுவதை உறுதிசெய்துள்ளது.

author img

By

Published : Sep 3, 2021, 7:17 PM IST

சென்னை: சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய ஹாரர் காமெடி படங்களை இயக்கியவர் ராம்பாலா. இவர் இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன, வசூல் ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து ராம்பாலா, தற்போது மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் கூட்டணியில் 'இடியட்' என்னும் ஹாரர் காமெடி படத்தை இயக்கியுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள, இந்தப் படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.

திரையரங்கு வெளியீடு உறுதி

காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் கரோனா இரண்டாவது அலை காரணமாக ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் 'இடியட்' திரைப்படம், இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விரட்டும் வழக்குகள்... மீரா மிதுன் மீண்டும் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.