தமிழ் திரையுலகில் டாப் கதாநாயகியாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு துபாய் சென்றபோது அங்குள்ள ஹோட்டல் அறையிலிருந்த குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று நடிகை ஸ்ரீதேவியின் 57ஆவது பிறந்த நாளாகும். இதையொட்டி அவரது ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மூத்த மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீதேவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு "ஐ லவ் யூ அம்மா" என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதேவியை கட்டியணைத்தபடி ஜான்வி கபூர் இருக்கும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.