நடிகை பிரியங்கா சோப்ரா நேற்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில்,பிரியங்கா சோப்ராவின் கணவரும், பாடகருமான நிக் ஜோன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், "நான் எப்போதும் உன் கண்களை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஐ லவ் யூ பேபி. என் வாழ்வில் உன்னை போல் சிந்தனைமிக்க, அக்கறையுள்ள, அற்புதமான நபரை நான் சந்தித்ததில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் அழகியே " என்று குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">