ETV Bharat / sitara

மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகல்! - மலையாள நடிகர் சங்கம்

கொச்சி: மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகியுள்ளதாக தனது முகநூலில் பதிவிட்டார்.

parvathy-resigns
parvathy-resigns
author img

By

Published : Oct 13, 2020, 11:12 PM IST

2017ஆம் ஆண்டு முன்னணி மலையாள நடிகை படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர் அதுதொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஆதரவாக மலையாள நடிகர் சங்கம் செயல்பட்டதாகக் கூறி பல நடிகைகள் விலகினர்.

இந்த நிலையில் தற்போது அம்மா பொதுச் செயலாளர் இடவேலா பாபு நேர்காணல் ஒன்றில், நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட எடுத்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கடத்தப்பட்ட நடிகை குறித்து கேட்டதற்கு, சங்கத்திலிருந்து விலகியவர் எப்படி நடிப்பார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை பார்வதி "நடிகைகள் பலர் அம்மா சங்கத்திலிருந்து விலகியபோதும் சங்கத்தை மீட்டெடுக்க யாராவது வேண்டுமே என நான் தொடர்ந்து வந்தேன். ஆனால் இடவேலா பாபுவின் இந்தக் கருத்துக்கு பின் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது" எனப் பதிவிட்டு விலகுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: பார்வதிக்கு கதை எழுதும் நடிகை ரீமா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.