சிவகார்த்திகேயன் - 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், 'இரும்புத்திரை' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது பிரச்னைகள் நீங்கி சுமூகமான முடிவுகளை எடுத்திருப்பதால் படம் சொன்ன தேதியில் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
-
Here you go! #PlayHero is out on @GooglePlay 🎮🔍
— KJR Studios (@kjr_studios) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Go around, search and collect symbols. One winner has something amazing awaiting from our team! Most importantly, #PlaySafe 😇https://t.co/WBcYjCdUcs
iOS coming up tomorrow! #Hero @Siva_Kartikeyan @Psmithran @kalyanipriyan pic.twitter.com/zoJhqocmqB
">Here you go! #PlayHero is out on @GooglePlay 🎮🔍
— KJR Studios (@kjr_studios) November 24, 2019
Go around, search and collect symbols. One winner has something amazing awaiting from our team! Most importantly, #PlaySafe 😇https://t.co/WBcYjCdUcs
iOS coming up tomorrow! #Hero @Siva_Kartikeyan @Psmithran @kalyanipriyan pic.twitter.com/zoJhqocmqBHere you go! #PlayHero is out on @GooglePlay 🎮🔍
— KJR Studios (@kjr_studios) November 24, 2019
Go around, search and collect symbols. One winner has something amazing awaiting from our team! Most importantly, #PlaySafe 😇https://t.co/WBcYjCdUcs
iOS coming up tomorrow! #Hero @Siva_Kartikeyan @Psmithran @kalyanipriyan pic.twitter.com/zoJhqocmqB
இதனையடுத்து தற்போது இப்படத்தை வியாபாரப்படுத்தும் விதமாக படக்குழு புது யுத்தியை கையாண்டுள்ளது. அதாவது பிளே ஹீரோ (PlayHero) என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமில் ஹீரோ லோகோ அதிகமாக சேகரிக்கும் நபருக்கு அற்புதமான பரிசு காத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.