சென்னை: நடிகை ரேஷ்மி மேனன் கேரள மாநிலத்தை சேந்தவர். இவர் 2003ஆம் ஆண்டு வெளிவந்த ’ஜெயம்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். 2010ஆம் ஆண்டு வெளியான இனிது இனிது திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களுக்கு வரப்பிராசதம் என்றே சொல்லலாம். கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் ரேஷ்மி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதையடுத்து, தேனீர் விடுதி, பர்மா, மாயா, கிருமி, உறுமீன், நட்பதிகாரம் 79 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் ’ஐதராபாத் லவ் ஸ்டோரி’ என்ற திரப்படத்தில் நடித்துள்ளார்.
உறுமீன் படத்தில் நடித்தபோது பாபி சிம்ஹாவுடன் காதலில் விழுந்த ரேஷ்மி மேனன், பெற்றோர் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்க முத்ரா சிம்ஹா என்று பெயர் சூட்டினர். 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கிய ரேஷ்மி மேனன், தன் குழந்தைகளின் மேல் கவனம் செலுத்தி வருகிறார்.
இன்று (அக்.31) ரேஷ்மி மேனன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கரைபுரளும் அழகு வெள்ளத்தில் மின்னும் பொன் சிலை ரித்திகா சிங்!