சென்னை : கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் 2010ல் ‘போக்கிரி’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து தமிழில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் தெலுங்கில் 'எம் பில்லோ எம் பிள்ளடோ’ படம் 2010இல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ’பாவா’, ’அத்தரிண்டிகி தாரீடி’ “பாண்டவுலு பாண்டவுலு தும்மிடா” போன்ற படங்களில் நடித்தார்.
கன்னடத்தில் போக்கிரி, ஜரசந்தா, பீம தீரதல்லி, சிநெகிதாரு, மிஸ்டர் 420, விஜ்ஹில், அன்கடக்ஹா, பிரம்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை பிரணிதா 1992ல் அக்டோபர் 17ஆம் தேதி பிறந்தார். இவரது பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.