சென்னை: சமூக வலைதளங்களில் மோசமான கேள்விகளைக் கேட்ட ரசிகர்களுக்கு நடிகை நிவேதா தாமஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'குருவி' படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். அதன்பின் 'போராளி', 'நவீன சரஸ்வதி சபதம்', 'ஜில்லா', 'பாபநாசம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' படத்தில் ரஜினி மகளாக நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நிவேதா தாமஸ் அவ்வப்போது புகைப்படங்கள், கருத்துகளை பதிவிட்டு ரசிகர்களுடன் இணக்கமான உறவை மேற்கொண்டுவருகிறார். இதனையடுத்து, தற்போது தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது சில கேள்விகளை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார். மேலும் சில மோசமான கேள்விகளை கேட்ட ரசிகர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.
அதாவது, திருமணம் எப்போது? இதைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள், ஆண் நண்பர்கள்? நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? கன்னியா? உள்ளிட்ட கேள்விகளைத் தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் சக மனுஷியுடன் பேசுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொஞ்சம் மரியாதையும் கண்ணியமுடன் பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்தப் பதில் ஒட்டுமொத்த நடிகைகளின் குரலாக பிரதிபலளிப்பதாகத் தெரிகின்றன.