ETV Bharat / sitara

ஹன்சிகாவிற்கு வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்!

author img

By

Published : Oct 12, 2019, 10:23 AM IST

ஹன்சிகா ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும், இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

hansika new movie with cricket player sreesanth

ஹன்சிகா தற்போது ’மஹா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில் யோகி பாபு நடித்த ’தர்ம பிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த த்ரில் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்றும், இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

திகில், நகைச்சுவை கலந்த இந்தப் படத்தை இயக்குநர் ஹரிஹரிஸ் இயக்கவுள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்தப் படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஏற்கனவே இந்தி, மலையாளம், கன்னட மொழிப் படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பதால் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கன்னட சூப்பர் ஸ்டாருடன் திரையில் இணையும் ஸ்ரீசாந்த்

Intro:Body:

ansika

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.