பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'அழகிய கண்ணே'. சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியிடம், துணை இயக்குநராகப் பணியாற்றிய விஜயகுமார் இயக்குகிறார்.
இதில் பிரபு சாலமன், விஜய் டிவி பிரபலம் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கின்றனர். ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். விரைவில் இவர் பாடிய பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 'அழகிய கண்ணே' படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணியை சங்கத் தமிழன் செய்துவருகிறார்.
இதையும் படிங்க: HBD லேடி சூப்பர் ஸ்டார்: 'கல்லுக்குள் ஈரம் முதல் கட்டமைத்த அரசியல் வரை'