'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஐங்கரன்'. இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடிக்கிறார்.
மேலும் இவர்களுடன் காளி வெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக மட்டுமல்லாது இசையமைக்கிறார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார்.
'ஐங்கரன்' படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது ட்விட்டரில் வெளியிட்டார். அதில், அரசு நம்மள டேட்டாவா பாக்குது; அரசியல்வாதி நம்மள ஓட்டா பாக்குறான்; வியாபாரி நம்மள கஸ்டமரா பாக்குறான். யாரும் யாரையும் இங்க மனுசனாவே பாக்குறதில்ல உள்ளிட்ட வசனங்கள் பெரும் ஈர்பை ஏற்படுத்தியிருந்தன.
பல்வேறு பிரச்சினைகளால் இப்படத்தின் வெளியிட்டு தேதி தள்ளிப்போனது. தற்பபோது இப்படத்தை முன்னணி ஓடிடி தளமான சோனி லைவ்வில் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பாடல்களை ஏலத்தில் விடும் ஜிவி பிரகாஷ்: டிஜிட்டல் உலகில் புது முயற்சி!