இந்திய சினிமாவில் தற்போது தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டுஅதிக அளவிலான படங்கள் வெளிவருகிறது.
அந்தவகையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இயக்குநர் கெளவுதம் மேனன் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களது வரலாற்றை பின்னணியாக கொண்டுபயோ பிக் வெப் சீரிஸை இயக்க முடிவுச்செய்துள்ளார்.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. கெளவுதம் மேனன் தனுஷை வைத்து உருவாக்கி வரும் என்னைநோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசான பிறகு இந்தப் பணிகளை தொடங்க இருக்கிறார்.