இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜோஷ்வா'. இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த வருண் 'ஒரு நாள் இரவில், போகன், எல்கேஜி, பப்பி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதில், வருணுக்கு ஜோடியாக அறிமுக நடிகை ராஹெய் நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
தற்போது இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான 'ஹை ஜோஷ்வா...' எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இரண்டாவது பாடலுக்கான ட்யூனை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனே முணுமுணுத்தவாறு அறிமுகப்படுத்திய காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வருண் கூறுகையில், "இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் படப்பாடல் வெளியாகும்போதெல்லாம், பரபரப்பு தொற்றிக் கொள்வதை, நாம் தொடர்ந்து கவனித்திருக்கிறோம்.
இந்தப் படத்தின் முதல் பாடலைப் போலவே, இரண்டாவது பாடலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருவது குறித்து, நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
'தள்ளிப்போகாதே...' , 'கற்க கற்க...' போன்ற பாடல்களில் சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பரபரப்பான விசுவல்ஸ் இடம்பெற்றிருப்பதுபோன்று, இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. விக்னேஷ் சிவன் எழுதிய இந்த இரண்டாவது பாடலை கார்த்திக் இசையமைத்துப் பாடியிருக்கிறார்.
90 விழுக்காடு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு பத்து அல்லது பன்னிரெண்டு நாட்கள் நடந்தால் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும்'' எனக் கூறினார்.
'கெளதம் மேனனின் படப்பாடல் வெளியாகும்போதெல்லாம் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்' - நடிகர் வருண்
சென்னை: 'ஜோஷ்வா இமைபோல் காக்க' திரைப்படத்தின் இரண்டாவது பாடலை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனே முணுமுணுத்தவாறு, அறிமுகப்படுத்திய காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.