ETV Bharat / sitara

புத்தரை அவமதிக்கும் 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' டீசர் வெளியீடு - கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்'

புத்தரை அவமதிக்கும் விதத்தில் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்
author img

By

Published : Mar 19, 2019, 4:40 PM IST

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கிருக்கும் படம் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ். வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ப்ரியங்கா ருத், அசோக், இயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ரத்தமும், சதையும் கலந்த வன்மத்துடன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் பின்னணியில் உருவகப்படுத்தியுள்ள காட்சிளும் வசனங்களும் பிரமாதம். டீசர் நடுவே வரும் வசனங்களில் அனல் தெறிக்கின்றன.

அசர வைக்கும் இசையுடன் ஆரம்பிக்கும், படத்தின் டீசரில், 'ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்.. தேவை ஆசையாக மாறும்பொழுது நாம எடுத்துக்கனும்' என்ற தெரிக்கும் வசனங்கள் காட்சியை அருமையாக நகர்த்தி செல்கிறது. ஆனால், புத்தரின் சிலையை வைத்துக்கொண்டு அற்பத்தனமாக படுக்கையறை காட்சியை வைத்திருப்பது புத்தரையே கேவலப்படுத்துவது போன்று இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்த நினைக்கும் சி.வி.குமார் இதுபோன்று புத்தரை அசிங்கப்படுபத்தும் வகையில் சித்தரித்து காட்டிருப்பது அவரை போதிக்கும் மக்களுக்கு கோபத்தை தரும் என்பது தெரியாதா... சர்ச்சையை கிளப்புவதற்காக இதை வைத்தது போல் தெரிகிறது. இந்த வன்மமான படுக்கை அறை காட்சி புத்தரின் போதனைகளை அவமதிப்பதுபோல் உள்ளது. இதனை நீக்க வேண்டும் என்று எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.

#GangsofMadras Teaser 

 @icvkumar @ThirukumaranEnt @dopkarthickk @editorRAD @dafusiamusic @shyamalagan 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.