ETV Bharat / sitara

சட்டவிரோதமாகக் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்து பேசவருகிறது 'கல்தா'!

author img

By

Published : Oct 18, 2019, 6:18 PM IST

'தெரு நாய்கள்', ' படித்தவுடன் கிழித்து விடவும்' போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ். ஹரி உத்ரா, தனது மூன்றாவது படத்துக்கு 'கல்தா' என்று பெயர் வைத்ததின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

'கல்தா'

மலர் மூவி மேக்கர்ஸ், ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்கொடி ரகுபதி, உஷா, எஸ். ஹரி உத்ரா இணைந்து தயாரிக்கும் 'கல்தா' திரைப்படத்தில் சிவா நிஷாந்த், 'மேற்குத் தொடர்ச்சி மலை' புகழ் ஆன்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி. கருணாநிதி, 'காக்கா முட்டை' சசி, சுரேஷ் முத்து வீரா, பழைய ஜோக் தங்கதுரை, ராஜ சிம்மன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

galtha movie
கல்தா

சட்டவிரோதமாகக் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்து தோலுரித்துக் காட்டும் படம்:

இப்படம் குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஹரி உத்ரா, இத்திரைப்படம் மிகத் தீவிரமான ஒரு பிரச்னையை குறித்துப் பேசப்போகிறது என்றார். மேலும், அண்டை மாநிலங்கள் சட்டவிரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டுவந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது என்றும் கூறினார். இதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரசியல்வாதிகளை இப்படம் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை என்று குறிப்பிட்ட இயக்குநர், தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் மக்கள் எந்த அளவுக்கு உடல்ரீதியாக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பதை இப்படத்தில் சுட்டிக்காட்ட முயன்றிருப்பதாகக் கூறினார்.

director S. Hari Uthra
இயக்குநர் எஸ். ஹரி உத்ரா

கே. ஜெய் கிருஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு, பி. வாசு ஒளிப்பதிவு செய்கிறார், முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை கோட்டியும் நடனக் காட்சிகளை சுரேஷும் அமைக்க, கலை இயக்குநர் பொறுப்பை இன்ப ஆர்ட் பிரகாஷ் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பில் புகைப்படம் எடுக்கும் பொறுப்பை பா. லக்ஷ்மண் ஏற்கிறார்.

கவிப்பேரரசுவின் பாடல்களுக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்க, செந்தில் ராஜலட்சுமி, கானா புகழ் இசைவாணி ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையாக கட்டச் சொல்லிய விஜய்சேதுபதி!

Intro:Press Release – Galtha Body:கல்தா -ஒரு புதுமைப் படைப்பு

'தெரு நாய்கள்', ' படித்தவுடன் கிழித்து விடவும்' போன்ற இயக்கிய எஸ்.ஹரி உத்ரா தனது மூன்றாவது படத்துக்கு 'கல்தா' என்று பெயர் வைத்தன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.
மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்கொடி ரகுபதி, உஷா மற்றும் எஸ்.ஹரி உத்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவா நிஷாந்த், மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆன்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி.கருணாநிதி, காக்கா முட்டை சசி,சுரேஷ் முத்து வீரா, பழைய ஜோக் தங்கதுரை மற்றும் ராஜ சிம்மன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படம் குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஹரி உத்ரா தெரிவித்ததாவது...
இத்திரைப்படம் மிகத் தீவிரமான ஒரு பிரச்னை குறித்து பேசுகிறது. அண்டை மாநிலங்கள் சட்ட விரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது. இதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் மக்கள் எந்த அளவுக்கு உடல்ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறோம்.

கே.ஜெய் கிருஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு பி.வாசு ஒளிப்பதிவு செய்ய, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். கோட்டி சண்டைக் காட்சிகளையும், சுரேஷ் நடனக் காட்சிகளையும் அமைக்க, கலை இயக்குநர் பொறுப்பை ஏற்றிருப்பவர் இன்ப ஆர்ட் பிரகாஷ். படப்பிடிப்பில் புகைப்படம் எடுக்கும் பொறுப்பை பா.லக்ஷ்மண் ஏற்க, Conclusion:விளம்பர டிசைன்களை உருவாக்குகிறார் பிளஸன்ஸ்.
கவிப்பேரசுவின் பாடல்களுக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்க செந்தில் ராஜலட்சுமி, கானா புகழ் இசைவாணி ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.